Friday, 20 June 2025

20.அன்புநெஞ்சில் தோன்றுவான்-Indweller of loving heart

 


யோகம் தன்னில் உதிப்பவன் யோகம்கூட உதவுவான் 
அன்பின் பெயரைக் கொண்டவன் அன்புநெஞ்சில் தோன்றுவான்
அடியவரின் துணையவன் சுருண்டகுழலில் அழகிவன்
பிறந்திருக்கு மேழுலகின் சிறந்ததொரு நாயகன்


SAI is the 
One who is realized through Yoga and one who helps in Yoga (saadhanaa)
One who assumes the name of Love and appears in the heart of devotees.
He is the companion of devotees. He is one who radiates beauty through his curly hair.
He is the lord of the seven worlds.




19.எதிலுமுள்ள ரசமும் நீ -Essense of everything


 எதிலுமுள்ள ரசமும்நீ ஆத்துமத்தி னுள்ளும்நீ
செல்லுமுயிர் முடிவதாக உள்ளுகின்ற இடமும் நீ
சொல்லுகின்ற படியிலாத அன்பு செய்யும் தந்தையே 
வெல்லவொண்ணா மாட்சி நீ அழிவிலாத சாட்சிநீ 


__________________

Hey Sai, 

You are the essence of everything; 
You are the indweller of aatmaa
You are the refuge of everything
You who confers love beyond words, are invincible and a perpetual witness to everything!



18.அண்டமாய்ப் பேரண்டமாய்த் தோன்றுகின்றாய் சாயி நீ -Viraat swaroopa Sai

 
அண்டமாய்ப் பேரண்டமாய்த் தோன்றுவாய்  விராடமாய் 
இடம்விடாத ஒன்றுமாய் விளங்குகின்ற தெங்குமாய்
கண்டுகொள்ள தொண்டரால் பண்ணிசைக்கும் சின்னமாய் 
நேற்றுமின்று நாளையாய்ப் போற்றுகின்ற ஒன்றுமாய்
தோற்றிஉயிரைப் பேணுவாய் பெற்றபிள்ளை போலவே
உற்றுமதனில் வாழுவாய் உள்ளினுள்ளு மாகவே 
கிடந்தசைந் திருப்பவன் அனைத்தினுள்ளுமேயும் நீ 
படைத்தயாவும் தோன்றவளரக் காரணமே சாயி நீ ..! 


Hey Sai!
You are the viraata swaroopaa that pervades everything completely  & appear as the Universe.
You appear before devotees for them to have darshan of you easily and worship.
You are the time and the time transcending creator who protects the lives as a mother.
You created & pervaded everything.


 MENU


Wednesday, 18 June 2025

17.பாரில் சாயிராமனாய் வந்து காத்த தெய்வம் நீ -SAIRAM the Protector

 

உலகைப் படைத்த பிரமன்நீ அதனைக் காக்கும் விஷ்ணுநீ

அண்ட மடங்கும் ஊழிலும் நின்று நிலைக்கும் சிவனும்நீ

வித்து மான முதலும்நீ செத்தும்வாழ முடிவும்நீ 

சத்தி யத்தின் பாசம்நீ சக்தி ரூபத் தந்தைநீ

நின்றி ருக்கும் ஆதிநீ வென்றி ருக்கும் வெற்றிநீ 

சென் றடைய கதியும்நீ என்றும் ஆத்ம சோதிநீ

லோக மாயச் சூழலில்  உழன்றிருக்கும் மாந்தரை 

பாரில் சாயிராமனாய் வந்து காத்த தெய்வம் நீ  

பற்றி யுந்தன் பாதமே ஒன்றி நாமம் சொல்லிட 

போற்றி யுன்னைப் பாடிட வெற்றி வெற்றி வெற்றியே..!


_______________________________

Hey Sai!
You are the Brahma who created the universe
You are the Lord Vishnu who protects it
You are the Lord Shiva who annihilates and assimilates everything in the Pralayaa
Your are the seed of the first and you are the end that lives endlessly
You are the ancient and you are the success
You are the refuge and You are the light of Aatmaa
You are the almighty that descended on earth as SAIRAM to protect the humans from Maayaa
Salutations to thee and thy feet will always bestow success!


 MENU


16.சாயி தெய்வ வாக்கிலே துலங்கும் ஞான ஞானமே-SAI Gospel

 தர்மம்-தன்னைக் காக்க-தர்மம் வந்து-உன்னைக் காக்குது

என்று சாயி தெய்வ வாக்கு என்ன-உனக்குச் சொல்லுது

தர்மம்-தன்னைக் காப்பதென்ப துன்னை-நீயே காப்பது

உன்னைக்-காக்க பிறரைக்-காக்க வேண்டும்-என்று அறிந்திடு

லோகம்-முழுதும் சுகித்தல்-வேண்டி நடத்தும்-பூஜை கடந்து-நீ

அகில-லோகம் அனைத்தும்-சுகிக்க வேண்டும்-நிலைக்கு உயர்ந்திடு

பிறரில்-உன்னைக் காணலே-உன் உள்ளத்-தூய்மை சாதனம்

அவரில்-தோன்றும் குறைகள்-உன்-உள் உண்டு-என்று அறிந்துநீ

இயன்ற-வரை முயன்றிடு முயன்று-பார்த்து களைந்திடு

பயின்ற-யோக..மாக-இதனை இறைவன் சாயி கூறினார் 

கனன்ற-தீயில் தூசென மாசு-உன்னில் போய்விட

எனது-என்று ஒன்றிலை என்று-சித்தம் ஆய்விட

மனதும்-செத்து ஓய்ந்திட சித்தின்-வித்த..றுந்திட

கணத்தில்-தோற்ற..மாகிடும் துலங்கு-ஞான ஞானமே!

-------------------------------------

When the dharma is protected by embracing it as a way of life, the very same dharma will protect you. Thus spake Sri Sathya SAI.
This means that protecting darma is like protecting oneself. Dharma axiomatically lays down that one should be selfless and serve others. It implies that to protect oneself, one should protect others.
Swamy says that one should expand the consciousness beyond the world to encompass the welfare of all worlds.
Seeing others in you is the easy way to purify the mind.
One should realize that the fault in others are only the manifestation of those in one's own self.
So try and eliminate the shortcomings in you to purify the heart, said SAI.Once this is practiced as Saadhanaa , then the Chitta gets purified in such a way as to receive the utmost gnaanaa.




 MENU


Sunday, 8 June 2025

15.சாயி தந்த சேவையிலே மோக்ஷம் எளிதில் கிட்டுது -Seva confers Moksha

யாகம்தன்னில் கிட்டிடாது ஆள்-பலத்துக் கடங்கிடாது
செல்வத்தினால் கிட்டிடாது மோக்ஷமுந்தன் கைப்படாது
சேர்ப்பதனால் கிடைத்திடாது துறப்பதனால் தீமை-ஏது
யாக-யோகத்.. தின்-படாது த்யாகமின்றி தென்படாது
எனினும் சாயி சொல்லித்தந்த அன்பு கொண்ட சேவையாலே
தோன்றும் த்யாக எண்ணமுமே மாறும் உள்ளம் திண்ணமுமே !
கைவருமே எவருக்குமே எளிதில் அந்த மோக்ஷமுமே!


*ந கர்மணா ந ப்ரஜயா தனேன - த்யாகேன ஏகே அம்ருதத்வமான சுஹ்:
பரேண நாகன் நிஹிதம் குஹாயாம் விப்ராஜதே தத்யதயோ விசந்தி ||

என்ற  கைவல்ய உபநிஷத ஸ்லோகத்தின் கருப்பொருளை  ஒட்டி அமைக்கப்பட்டது .
இதன் பொருள் : உழைப்பாலோ, சந்ததியாலோ, செல்வத்தாலோ அல்ல, துறவறத்தால் மட்டுமே சிலர் அழியாமையை அடைந்துள்ளனர். சொர்க்கத்திற்கு அப்பாற்பட்ட அந்த (அழியாத) நிலையை, தங்கள் இதயத்தில் பிரகாசிக்கும் (சுயமாக) சுயக்கட்டுப்பாடு கொண்ட துறவிகளால் அடைய முடியும். ஆனால் துறவு இல்லாமலேயே நம் ஸ்வாமி சொல்லித்தந்த சுயநலமற்ற சேவையினால் மோக்ஷம் எளிதில் கிட்டும்.

The above is based on the following Kaivalya Upanishad Sloka 
"na karmaṇā na prajayā dhanena tyāgenaike amṛtatvamānaśuḥ .
pareṇa nākaṃ nihitaṃ guhāyāṃ vibhrājate tadyatayo viśanti .."

which means
Not by work, nor by progeny or by wealth, but by renunciation alone have some attained immortality. That (immortality) which is even beyond the heaven, is attained by the self-controlled reununciates (as the Self) shining in their heart.
Such a Moksha is easily attained by the selfless service that our Swamy taught us.
SAIRAM


 MENU

14.அகத்தில் உரைக்கும் காரம் தீரவே வந்தது நேரம்-Time has come.

 

அகத்திலே உரைக்கும் காரம்
கணத்திலே  விரைந்தே போக்கும்
இனிப்புமே சாயி உன் நாமம் 
கனியவே தினமும் ஓதும் 
நெஞ்சிலே விளங்கும் போதம் 
விலகுமே வினையின் சேதம்
விளங்குமே சித்தன் போதம்
எனக்கு நீ என்றே தோன்றும் 
விதம் வரும் உன்னைச் சேரும் 
வண்ணமே எவர்க்கும் நேரம் !

 *அகத்தினில் உரைக்கும் காரம் = அகங்காரம் 

The name SAI is the swat that removes the bitter hotness of the ahamkaaraa.
SAI grace will be upon the pure heart that chants it ever.
The effect of karma will dissipate slowly and the chitta will attain purity.
The auspicious time, for chitta to think that "SAI is the only refuge" will come by its grace.





13.அரிது அரிது - Rare & Rare

 

அரிது அரிது மனித்தப் பிறப்பு
அதனினும் அரிது அடியவர் உறவு
அதனினும் அரிது அவர்வாய்ச் சொல்லால்
இறைஉயர் வறிதல் எனும்பெரும் பேறு
அதனினும் அரிது சாயியை இறைவன் 
என்றுணர் அறிவு தரும் ஒரு பரிவு 
அதனினும் அரிது சாயியின் பெருமை 
வார்த்தையால் என்றும் உரைத்திடல் அரிதே !

Rare is the human birth
Rarer than that is the Satsangh
Rarer than that is the willingness to learn from them
Rarer than that is the the compassion that sprouts from the heart that realizes the divinity of Sathya Sai &
Rarest of them all is the pure heart that ever keeps reciting the SAI naamaa and ruminating-on the glory of SAI..!




Monday, 2 June 2025

12.எந்தயுகம் ஓயும்ஐயே எந்தனுக்கு மாயத்தொல்லை-When is my salvation!.

 

அஞ்சுநெறி செஞ்சதில்லே அஞ்செழுத்து சொன்னதில்லே
அன்புநெறி நெஞ்சத்தில்லே பஞ்சுத்திரி போல-இல்லே
முன்னின்குறி கொஞ்சத்திலே மிச்சமின்றி போவதில்லே
"என்"னின்அறி யாமையாலே வந்தவலி ஓயவில்லே
சொந்தமென நெஞ்சத்திலே கொண்டதனம் நிற்பதாலே
அந்தஅரி நெஞ்சத்திலே நிற்கஇடம் சற்றுமில்லே
இந்தஎண்ணம் வந்தபின்னும் எந்தன்மனம் மாறவில்லே 
கொஞ்சநேரம் நெஞ்சடங்கி சாயி உன்னை எண்ணிடவே 
கொஞ்சமு
ம்-மு..டியவில்லை நெஞ்சமும்தான் அடங்கவில்லை 
எந்தயுகம் ஓயும்ஐயே எந்தனுக்கு மாயத்தொல்லை!

* அஞ்சு நெறி = 
பஞ்ச சம்ஸ்காரங்கள் என வைணவத்தில் அழைக்கப்படும்
செந்நெறிகள் : 1.சங்கு சக்ரம் தரித்தல், 2.நாமம் உடலணிதல், 3.தாச நாமம் 
ஒன்றை ஏற்றல் , 4.திருமால் வடிவங்களில் ஒன்றை பூசித்து வருதல், 
5.வைணவ திரு மந்திரத்தை உபதேசித்தல்.

அஞ்செழுத்து = நமசிவாய

பஞ்சுத்திரி போல இல்லே = பஞ்சுத் திரி போல நெஞ்சம் இல்லை. 
பக்தனுடைய நெஞ்சு பஞ்சுத்திரி போலிருக்க வேண்டும். பஞ்சு போல் 
மென்மையுடனும், திரி போல் தீபத்தைத் தாங்கி ஒளிவிடும் திறத்துடனும் 
இருக்க வேண்டும்.பஞ்சு தீயில் எரிந்து போகும். திரி தீபமாய் ஒளி விடும்.
பஞ்சு போல் எரிந்து விடாமல் இறைவன் ஒளியைத் தாங்கி நிற்கும் திரி போல் நெஞ்சம் இருக்க வேண்டும் என்பது பொருள்.

__________________________

Hey SAI!
I haven't held on to any spiritual practice; I haven't even sincerely chanted God's name.
My heart is so impure that it doesn't even hold on to you for a moment.
My Karma induced desires are infesting my mind because of which there is no space in my heart for God.
I can't even still the mind for a moment to be able to ruminate on you.
I just can't stand such a life, Oh SAI when will this torture end!





11.சாயீசா இறையோனே மறவாதே மறுக்காதே-Lord Sai forsake me not...!


 அமுதக் கடல்கடைந்து *வாருணைத் துளிசுவைத்து
*சுமுகத்தின் சுகிர்தநிலை சிரச்சுடரால் தான்பெற்று
எழுத்தில் வடிக்கவொண்ணா *நறைகமழுன் பதம்பிடித்து
சுழுமுனையின் எழுவிசையை முயன்றெழுப்பும் சாதகத்தை
அணுவளவும் பழகாத நாயேனாம் கீழோனென்னை
சாயீசா ஏழீசா மறவாதே மறுக்காதே
ஊழாலே சுழன்றழுகும் ஊனாலே உழல்கின்ற
கழுபிறப்பைப் போக்காயோ உன் கண்ணால் நோக்காயோ 
பாழ்மனதின் இருட்கதவை பொருளாலே கிடைக்காத
விழுப்பொருளே விரைசிவமே இமயமுறை விரிசடையே
அழுதிடவும் நீர்சுரக்கா கல்மனத்தின் மானிடன்நான்
தொழுதிடவும் அறிந்திலனே அருளிடுமா மாணிக்கமே!

*சுமுக சுகிர்தநிலை = பேரமைதி பெருநிலை
*வாருணை = ஆனந்தக் கள்
*நறைகமழ் = இன்பம் அளிக்கும்
*ஏழீசா = ஏழாம்  எண்ணுக்குரியோனே (சிவ பெருமான்) / எழுலகை ஆள்வோனே /  ஏழு
நாடிகளையும் ஆள்வோனே

---------------------------

Lord SAI, I do not know any worthy spiritual practice. Yet, please don't forsake me.
Please cut asunder the chain of birth death cycle by removing my ignorance.
Hey SAI, You are verily the Lord Shiva while I am a very insignificant soul who does not even shed tears on seeing you. I don't even know how to pray. Please don't give up on me, Show your grace.!



10.இறை நாம மஹிமை -Greatness of God's name

 

ராம-ராம ராம-என்று சொல்லப்-போகும் பாபமே 

வேகம்-கொண்டு அமைந்திடாமல் கணமும்-அலையும் நெஞ்சிலே 
மோகமென்னும் ரோகம்-போக்கி அமர-வைக்கும் நாமமே
ஸ்நேக-பாவம் கொண்டு-சொல்ல காட்டும்-அவனின் ரூபமே
என்று சொல்லி எங்களுக்கு அறிவு தந்த சாயி நீ 
அன்று தந்தை சொல் மதித்து கான் புகுந்த ராமனே !
__________________

God's name will ward off karma; It removes the desires from the mind and stills it on God.
It will ultimately create a friendship with God that leads to God realization.
Thus spoke SAI who is none other than the Lord Rama who went to forest to fulfil His father's wish.


9.கலியிலே ஒளிகொடுத்த ஜோதியே - The guiding light in Kali

 

குளம் நிறைந்த நீரிலே முகந்த அளவு குடமுமே
இறைவன் கருணைக் கடலிலே மனிதன் கொள்ளும் கருணையும்
இதயத் தூய்மை அளவிலே வாய்மை தன்னின் அளவிலே
இதயத் தூய்மை பெருக்கிடு மனதுக் குடத்தைக் கடலுமாய்
தூய்மை கொண்டு நிரப்பிட அதனில் இறைவன் குடிபுக
அன்பு வார்த்தை பேசிடு அன்பு சேவை செய்திடு 
பிறகு நினைந்து வேண்டிட விளங்கும் மனமும் கடலென
இறைவன் கருணை நிரம்பிட ஆகும் வெண்மை நிறம் பட
என்று-சொல்லி வாழ்க்கையின் வழிகொடுத்த சாயி நீ
இருண்டிருக்கும் கலியிலே ஒளிகொடுத்த ஜோதியே  ! 
  

---------------------------
Even if the reservoir is full, the amount of water is equal to the volume of the pot into which water is filled, Similarly even though God's grace is unbound, the amount got by the devotee depend on the purity and truthfulness of the heart.
So improve the purity of heart; for which perform seva;
Thus spake SAI and shown the path of darma in this dark age of Kali as a sparking light.!



8.கண் திறந்த-சாயியே .. SAI the saviour..!


கல்லும்மண்ணும் சேர்ந்த-காரைக் கட்டிடத்தி லேஉறை
செய்யுகின்ற தாகுமாஉன் கண்படாத வாலிறை
பொன்னும்-பொருளும் தந்துவாங்கும் பொருளுமாகு..மாஇறை
சொன்..னசொல் கவர்ச்சியால் மயக்கும்பேச்சி லாஇறை
உன்னிலே இருக்குமுந்தன் நெஞ்சிலவனைக் காணலாம்
கண்ணிலே வடிக்கும்நீரி..ரக்கமாகக் காணலாம்
மண்ணிலே இருக்கும்மற்ற மாந்தரின் துயர்தனைக்
கண்டதும் துடிக்குமீர நெஞ்சிலவனைக் காணலாம்
என்றுணர்ந்து அன்புகொண்டு சேவை-தன்னைச் செய்யுவாய் 
என்று-சொல்லி எங்கள்-ஞானக்  கண் திறந்த-சாயியே 
தொன்றுதொட்டிருக்கும் நீயும் ஆதி தெய்வம் அல்லவோ !   
 
--------------------
Does the God reside just in the buildings of stone and cement?
Can the Almighty be bought using money or gold?
Is God the one that can be won by attractive flattery?
No!
You can see Him inside the pure heart.
He can be seen in the droplets of tear rolling down for others.
He can be visualized in the heart that melts at the sufferings of others.
Thus spake Sathya SAI and opened our eyes.
He is verily the time transcending almighty !





Sunday, 1 June 2025

7.கரைபடா மனத்துறை பரம்பொருள்-The in-dweller of pure heart..!


சாயிராம சாயிராம சாயிராம சாயிராம்
நிதம்நிதம் உனைநினைத்து வந்தஅன்னை ஈஸ்வரி
தவம்அவள் மிகப்புரிந்து மண்ணில்வந்த நீஹரி 
சிதம்சிதம் தனில்நிறை விதம்சிறந் தருள்புரி 
பதம்பதம் தனைஎடுத்து இந்தபூமி வாஇனி 

மதம்கடந்த மானிடப் பிறப்பெடுத்த ஆதவா
சிதம்பரம் தனில்நடம் புரிந்திடும் சதாசிவா
தினம்புலம் நடந்துநல் வரம்கொடுத்த மாதவா
கரம்தனைச் சுழற்றியன்பு நீறளித்து காத்தவா 

ஆறுமாறு கூறுமன்பு மாறுமான சாயிராம்  
காணுமாறு வந்துமண்ணில் யாதுமான தூய்மையாம்
நேரிடாத வாரிடர் களைந்திடும் விநாயகா
ஏடிடா மறைக்கருப் பொருள்நீவேத வித்தகா 

உரைநடைக் குறைபடா திரும்இறைநீ-சாயிராம்
வரையறைக் ககப்படா திருந்திருக்கும்  ஆண்டவா
கரைபடா மனத்துறை அதில்கரந் திருப்பவா
குறைதிரை இலாதிரும் பரம்பொருள்நீ-சாயிரா
ம்..!
சாயிராம சாயிராம சாயிராம சாயிராம் (2).

---------------------

Lord SAIRAM!

You are verily the Hari descended on earth because of the penance of mother Easwaramba
Please bless us to be ever in SAI consciousness & descend on earth as Prema SAI.
You are the God incarnate that transcends the limitations of religion
You are the Lord Nataraja who performs the cosmic dance in Chitambaram.
You saved the devotees with the Vibhuti that manifests profusely by a mere waving of your hand.
You are like a river of love that smoothens the hearts.
You walked on earth for all to have your divine darshan.
You are the Lord Vinayaka who protects the devotees from the hurdles in pious endevours.
You are the nucleus of the Vedhaas.
You are the almighty that can not be explaind by words
You are unbound by any metric
You are the indweller of pure hearts
You are the ageless Almighty that has no shortcoming ..!


 

MENU


6 எங்கும் நிறை சாயி பிரும்மம்-All pervading SAI Brahman..!

 

மேலிருந்..தருள்கிறாய் கீழிருந்து தாங்குறாய் 

முன்நடந்து போகிறாய் பாதைகாட்டிச் செல்கிறாய் 

பின்னிருந்து சாட்சியாய்ப் பார்த்துஎன்னைக் காக்கிறாய்

அருகிருந்த..ணைக்கிறாய் ஆற்றிஇதம் கொடுக்கிறாய் 

உள்ளிருந்தா..தாரமான ஆத்துமமாய்த் திகழ்கிறாய் 

எள்ளிருக்கும் இடத்தினிலும் உயிர்படைத்துக் காக்கும்நீ

அன்பு-கொண்..டிறங்கினாய் அன்பினால் இரங்கினாய்

அன்புஎன்ற பேரைக்கொண்டு அன்பையூட்டும் சாயிராம்..!

____________________

Lord SAI,

You bless from above , support from below

You walk in front showing the right path.

You watch as a witness from behind and guard.

You stay near and console with your soothing solace.

You are the Atma the indweller and sustainer of all!

You are the almighty that creates and sustains life even in as tiny a  space as a sesame seed.!

You descended on earth with your love out of your love & with love as your name!


MENU

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...