Monday, 2 June 2025

9.கலியிலே ஒளிகொடுத்த ஜோதியே - The guiding light in Kali

 

குளம் நிறைந்த நீரிலே முகந்த அளவு குடமுமே
இறைவன் கருணைக் கடலிலே மனிதன் கொள்ளும் கருணையும்
இதயத் தூய்மை அளவிலே வாய்மை தன்னின் அளவிலே
இதயத் தூய்மை பெருக்கிடு மனதுக் குடத்தைக் கடலுமாய்
தூய்மை கொண்டு நிரப்பிட அதனில் இறைவன் குடிபுக
அன்பு வார்த்தை பேசிடு அன்பு சேவை செய்திடு 
பிறகு நினைந்து வேண்டிட விளங்கும் மனமும் கடலென
இறைவன் கருணை நிரம்பிட ஆகும் வெண்மை நிறம் பட
என்று-சொல்லி வாழ்க்கையின் வழிகொடுத்த சாயி நீ
இருண்டிருக்கும் கலியிலே ஒளிகொடுத்த ஜோதியே  ! 
  

---------------------------
Even if the reservoir is full, the amount of water is equal to the volume of the pot into which water is filled, Similarly even though God's grace is unbound, the amount got by the devotee depend on the purity and truthfulness of the heart.
So improve the purity of heart; for which perform seva;
Thus spake SAI and shown the path of darma in this dark age of Kali as a sparking light.!



No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...