Monday, 2 June 2025

8.கண் திறந்த-சாயியே .. SAI the saviour..!


கல்லும்மண்ணும் சேர்ந்த-காரைக் கட்டிடத்தி லேஉறை
செய்யுகின்ற தாகுமாஉன் கண்படாத வாலிறை
பொன்னும்-பொருளும் தந்துவாங்கும் பொருளுமாகு..மாஇறை
சொன்..னசொல் கவர்ச்சியால் மயக்கும்பேச்சி லாஇறை
உன்னிலே இருக்குமுந்தன் நெஞ்சிலவனைக் காணலாம்
கண்ணிலே வடிக்கும்நீரி..ரக்கமாகக் காணலாம்
மண்ணிலே இருக்கும்மற்ற மாந்தரின் துயர்தனைக்
கண்டதும் துடிக்குமீர நெஞ்சிலவனைக் காணலாம்
என்றுணர்ந்து அன்புகொண்டு சேவை-தன்னைச் செய்யுவாய் 
என்று-சொல்லி எங்கள்-ஞானக்  கண் திறந்த-சாயியே 
தொன்றுதொட்டிருக்கும் நீயும் ஆதி தெய்வம் அல்லவோ !   
 
--------------------
Does the God reside just in the buildings of stone and cement?
Can the Almighty be bought using money or gold?
Is God the one that can be won by attractive flattery?
No!
You can see Him inside the pure heart.
He can be seen in the droplets of tear rolling down for others.
He can be visualized in the heart that melts at the sufferings of others.
Thus spake Sathya SAI and opened our eyes.
He is verily the time transcending almighty !





No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...