Sunday, 1 June 2025

7.கரைபடா மனத்துறை பரம்பொருள்-The in-dweller of pure heart..!


சாயிராம சாயிராம சாயிராம சாயிராம்
நிதம்நிதம் உனைநினைத்து வந்தஅன்னை ஈஸ்வரி
தவம்அவள் மிகப்புரிந்து மண்ணில்வந்த நீஹரி 
சிதம்சிதம் தனில்நிறை விதம்சிறந் தருள்புரி 
பதம்பதம் தனைஎடுத்து இந்தபூமி வாஇனி 

மதம்கடந்த மானிடப் பிறப்பெடுத்த ஆதவா
சிதம்பரம் தனில்நடம் புரிந்திடும் சதாசிவா
தினம்புலம் நடந்துநல் வரம்கொடுத்த மாதவா
கரம்தனைச் சுழற்றியன்பு நீறளித்து காத்தவா 

ஆறுமாறு கூறுமன்பு மாறுமான சாயிராம்  
காணுமாறு வந்துமண்ணில் யாதுமான தூய்மையாம்
நேரிடாத வாரிடர் களைந்திடும் விநாயகா
ஏடிடா மறைக்கருப் பொருள்நீவேத வித்தகா 

உரைநடைக் குறைபடா திரும்இறைநீ-சாயிராம்
வரையறைக் ககப்படா திருந்திருக்கும்  ஆண்டவா
கரைபடா மனத்துறை அதில்கரந் திருப்பவா
குறைதிரை இலாதிரும் பரம்பொருள்நீ-சாயிரா
ம்..!
சாயிராம சாயிராம சாயிராம சாயிராம் (2).

---------------------

Lord SAIRAM!

You are verily the Hari descended on earth because of the penance of mother Easwaramba
Please bless us to be ever in SAI consciousness & descend on earth as Prema SAI.
You are the God incarnate that transcends the limitations of religion
You are the Lord Nataraja who performs the cosmic dance in Chitambaram.
You saved the devotees with the Vibhuti that manifests profusely by a mere waving of your hand.
You are like a river of love that smoothens the hearts.
You walked on earth for all to have your divine darshan.
You are the Lord Vinayaka who protects the devotees from the hurdles in pious endevours.
You are the nucleus of the Vedhaas.
You are the almighty that can not be explaind by words
You are unbound by any metric
You are the indweller of pure hearts
You are the ageless Almighty that has no shortcoming ..!


 

MENU


No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...