உலகைப் படைத்த பிரமன்நீ அதனைக் காக்கும் விஷ்ணுநீ
அண்ட மடங்கும் ஊழிலும் நின்று நிலைக்கும் சிவனும்நீ
வித்து மான முதலும்நீ செத்தும்வாழ முடிவும்நீ
சத்தி யத்தின் பாசம்நீ சக்தி ரூபத் தந்தைநீ
நின்றி ருக்கும் ஆதிநீ வென்றி ருக்கும் வெற்றிநீ
சென் றடைய கதியும்நீ என்றும் ஆத்ம சோதிநீ
லோக மாயச் சூழலில் உழன்றிருக்கும் மாந்தரை
பாரில் சாயிராமனாய் வந்து காத்த தெய்வம் நீ
பற்றி யுந்தன் பாதமே ஒன்றி நாமம் சொல்லிட
போற்றி யுன்னைப் பாடிட வெற்றி வெற்றி வெற்றியே..!
_______________________________
Hey Sai!
You are the Brahma who created the universe
You are the Lord Vishnu who protects it
You are the Lord Shiva who annihilates and assimilates everything in the Pralayaa
Your are the seed of the first and you are the end that lives endlessly
You are the ancient and you are the success
You are the refuge and You are the light of Aatmaa
You are the almighty that descended on earth as SAIRAM to protect the humans from Maayaa
Salutations to thee and thy feet will always bestow success!
No comments:
Post a Comment