Wednesday, 18 June 2025

16.சாயி தெய்வ வாக்கிலே துலங்கும் ஞான ஞானமே-SAI Gospel

 தர்மம்-தன்னைக் காக்க-தர்மம் வந்து-உன்னைக் காக்குது

என்று சாயி தெய்வ வாக்கு என்ன-உனக்குச் சொல்லுது

தர்மம்-தன்னைக் காப்பதென்ப துன்னை-நீயே காப்பது

உன்னைக்-காக்க பிறரைக்-காக்க வேண்டும்-என்று அறிந்திடு

லோகம்-முழுதும் சுகித்தல்-வேண்டி நடத்தும்-பூஜை கடந்து-நீ

அகில-லோகம் அனைத்தும்-சுகிக்க வேண்டும்-நிலைக்கு உயர்ந்திடு

பிறரில்-உன்னைக் காணலே-உன் உள்ளத்-தூய்மை சாதனம்

அவரில்-தோன்றும் குறைகள்-உன்-உள் உண்டு-என்று அறிந்துநீ

இயன்ற-வரை முயன்றிடு முயன்று-பார்த்து களைந்திடு

பயின்ற-யோக..மாக-இதனை இறைவன் சாயி கூறினார் 

கனன்ற-தீயில் தூசென மாசு-உன்னில் போய்விட

எனது-என்று ஒன்றிலை என்று-சித்தம் ஆய்விட

மனதும்-செத்து ஓய்ந்திட சித்தின்-வித்த..றுந்திட

கணத்தில்-தோற்ற..மாகிடும் துலங்கு-ஞான ஞானமே!

-------------------------------------

When the dharma is protected by embracing it as a way of life, the very same dharma will protect you. Thus spake Sri Sathya SAI.
This means that protecting darma is like protecting oneself. Dharma axiomatically lays down that one should be selfless and serve others. It implies that to protect oneself, one should protect others.
Swamy says that one should expand the consciousness beyond the world to encompass the welfare of all worlds.
Seeing others in you is the easy way to purify the mind.
One should realize that the fault in others are only the manifestation of those in one's own self.
So try and eliminate the shortcomings in you to purify the heart, said SAI.Once this is practiced as Saadhanaa , then the Chitta gets purified in such a way as to receive the utmost gnaanaa.




 MENU


No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...