யாகம்தன்னில் கிட்டிடாது ஆள்-பலத்துக் கடங்கிடாது
செல்வத்தினால் கிட்டிடாது மோக்ஷமுந்தன் கைப்படாது
சேர்ப்பதனால் கிடைத்திடாது துறப்பதனால் தீமை-ஏது
யாக-யோகத்.. தின்-படாது த்யாகமின்றி தென்படாது
எனினும் சாயி சொல்லித்தந்த அன்பு கொண்ட சேவையாலே
தோன்றும் த்யாக எண்ணமுமே மாறும் உள்ளம் திண்ணமுமே !
கைவருமே எவருக்குமே எளிதில் அந்த மோக்ஷமுமே!

*ந கர்மணா ந ப்ரஜயா தனேன - த்யாகேன ஏகே அம்ருதத்வமான சுஹ்:
பரேண நாகன் நிஹிதம் குஹாயாம் விப்ராஜதே தத்யதயோ விசந்தி ||
என்ற கைவல்ய உபநிஷத ஸ்லோகத்தின் கருப்பொருளை ஒட்டி அமைக்கப்பட்டது .
இதன் பொருள் : உழைப்பாலோ, சந்ததியாலோ, செல்வத்தாலோ அல்ல, துறவறத்தால் மட்டுமே சிலர் அழியாமையை அடைந்துள்ளனர். சொர்க்கத்திற்கு அப்பாற்பட்ட அந்த (அழியாத) நிலையை, தங்கள் இதயத்தில் பிரகாசிக்கும் (சுயமாக) சுயக்கட்டுப்பாடு கொண்ட துறவிகளால் அடைய முடியும். ஆனால் துறவு இல்லாமலேயே நம் ஸ்வாமி சொல்லித்தந்த சுயநலமற்ற சேவையினால் மோக்ஷம் எளிதில் கிட்டும்.
The above is based on the following Kaivalya Upanishad Sloka
"na karmaṇā na prajayā dhanena tyāgenaike amṛtatvamānaśuḥ .
pareṇa nākaṃ nihitaṃ guhāyāṃ vibhrājate tadyatayo viśanti .."
which means
Not by work, nor by progeny or by wealth, but by renunciation alone have some attained immortality. That (immortality) which is even beyond the heaven, is attained by the self-controlled reununciates (as the Self) shining in their heart.
Such a Moksha is easily attained by the selfless service that our Swamy taught us.
SAIRAM
No comments:
Post a Comment