Monday, 20 October 2025

87.சொர்க்கத்தைக் காட்டிச்சென்றசாயி -SAI darshan soul sparshan


சொர்க்கத்தைக் காட்டிச்சென்றசாயி 

பிரிவுத் துன்பத்தில்வாடுதுந்தன் சேயே

மாளிகை மண்ணும் பொன்னும் ஸ்வாமீ 

உந்தன் கைதரும் நீறின்-முன்னே தூசே


பக்கத்தில் வந்து நின்று பரிவினைக் கொடுத்து

அங்கி தவழப் பஞ்சுப் பாதங்கள் எடுத்து 

மெல்ல நடந்துஉந்தன் தரி..சனம்கொடுத்து 

ஐயா வந்து-தருவாயே கண்ணுக்கு விருந்து 


கன்னத்தில் சின்னப்பரு கண்-த்ருஷ்..டிப் பொட்..டு

கொள்ளை அடித்ததெந்தன் நெஞ்சை கட்டிப் போட்டு  

அன்னைக்கு ஈடுகொண்ட நெஞ்சத்திலன்போடு 

அய்யா -உலகத்தில் வந்தளிப்பாய் ப்ரேமை இப்போது..!


Hey Lord SAI!
You left the earth after showing us the heaven on earth
Your children suffer from the pangs of your separation
All mundane wealth is like dust in front of your divine hand manifested vibhuthi
Your darshan of nearness is a feast to our eyes and soul
What is comparable to your Prema; Please give it to us descending on earth at once!


MENU



No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...