Monday, 6 October 2025

53.பாடிடுவோம் பணிந்தவரை..காத்திடுமே பணிந்தவரை-Let's sing His glory


 ஆயிரம்-பல்..லாயிரமாய்ப் பாட்டெழுதிச் சொல்லிடவா 
சாயீசன் பெருமைகளில் துளியேனும் முடித்திடவா 
பாட்டில்-சொல்லி முடிப்பதற்கு அவன்-பெருமை சரித்திரமா
ஏட்டில்-சொல்லி விளக்குதற்கு அவன்-மஹிமை புரிந்திடுமா
கண்ணனாக த்வாபரத்தில் அவன்-புரிந்த லீலைகளே
இன்னும்-கலி யுகத்திலுமே முடிந்த-பாடு ஆகலையே
குந்துமணி அளவுமில்லை ஸ்ரீராமன் வடிவத்திலே
அவன்-புரிந்த லீலைகளை சொன்னதந்த பாடல்களே ..
ஆழ்கடலே அவன்-பெருமை அடங்கிடுமா ஏட்டினிலே
ஏழேழு ஜென்மத்திலும் புரிந்திடுமா அவன்-மகிமை
ஆனாலும் பாடிடுவோம் முடிந்தவரை பணிந்தவரை 
காட்டிடுமே பேரருளை காத்திடுமே பணிந்தவரை 
பந்தமில்லாப் பெருவாழ்வைப் பெற்றிடுவோம் நாம் விரைவில்
பாடிடுவோம் முடிந்தவரை நாம்-கூடி அவன் பெயரை..

---------------------------------------------------------------------------------

Even thousands of songs can not describe a drop of SAI's glory
Is His glory just a time dependent history ?!
Is it a theory to explain and document for all to understand
The singing of the greatness of His glory in His avatar as Krishna could not be completed even in Kaliyuga.
Its not even a tiny ball head magnitude that has been described in songs of His Ramaavatar
His glory is like multitudes of deep oceans; Can that be contained in mere writing
Can one fathom His glory even in 100s of Janmaas
Yet, we sing His glory to the extent we can by His grace
It will bestow His grace and save the devotees from deluge of ignorance
Let's sing His Glory, Let's Sing SAI Naamaa!

No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...