Tuesday, 14 October 2025

61.சத்தியத் திருமகன் எப்பவு மருள்பவன்-Lord SAI ever blesses

 
சத்தியத் திருமகன் எப்பவு மருள்பவன்
நித்தியம் உன்பதம்  பணிவோமே
கற்றிட வேறிலை புத்தியில் உன்பெயர்
கொண்டிட எழும்பே..ரறிவா,,,மே
பெத்தவெங்..கமராஜு உத்தமீஸ் வரிமகன்
இன்னொரு முறைபுவி வருவாயே
எம்மத மாயினும் சம்மத மெனும்-நீ
ஞானியர் உளம்நிறை இறைதானே
செந்தமிழ் உன்புகழ் சொற்பட எழுதிட
திக்குது திணறுது முடியா..மே
 எவ்வரம் வேண்டினும் தந்தேனிப்..பவேயென
நின்னருள் திருநீறளிப்பாயே 
அஞ்சனை மகன்துதி  சுப்பிரமணித் துதி
இப்படிப் பண்முறை தரும் சாயி
 உன்பத மலர்பட இச்சிறு மகனெதிர்
இக்கணம் நடந்தருள் தருவாயே..!
------------------------------------------------
The truth incarnate Hey Lord SAI, we shall ever extol your divine feet with your grace.
There is nothing greater to learn than having your divine grace that will bestow true GNAANAA.
Dear SAI who descended on earth as the divine son of Peddha Vengama Raju and Easwaraamba,
Please take a humar birth once again to bless us.
You, who bless all irrespective of relegion,cate creed, is verily the almighty that is comtemplated ever by Gnaanis.
The exalted Tamil itself is baffled and finds it impossible to describe your greatness.
You are verily the almighty who instantaneously bless the devotees with your Viboothi.
Hey SAI, You devised the SAI Bhajan sampradhaayaa that encompasses all forms of God and ends with Anjaneya stuthi followed by Subrahmanya Sthuthi.
Oh my lord SAI!
Please appear before me now and here and take you enchanting blissful darshan walk !!


No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...