Tuesday, 14 October 2025

57.இதோ அருள்-தரும்-முகம்-Here is the divine face of Grace


 இதோ அருள்-தரும்-முகம்  அதில்-இதம் பெறும்-மனம் 
விடாது-நம்மைக் காத்திடும் சாயிராம  நாமமும்
அடா அடா எனும்-விதம் வள்ளல் சாயி-தந்திடும் 
தரிசனம் பெறும்-மனம் தனை-மறந்து ஆடிடும் 
இதே-அரும் பதம் ஷிரடி-வந்..திருந்தது
மனிதனாய்ப் பாரிலே அற்புதம் செய்தது 
நமக்கென பர்த்தியில் மீண்டும் வந்திருந்தது 
மக்களை அனுதினம் அன்பினில் காத்தது  
 நாமொரு அடிவர நூறடி வந்தது 
மனங்களை ஈர்த்தது அன்பினை ஈந்தது
ஓமெனும் ஒலியதன் மூச்சினில் ஒலித்தது
பித்தினை தீர்த்திடும் அதன்-கரம் அளித்தநல் 
நீறினை இட்டதும்  நீரினில் கரைவது 
போல்வினை விட்டது போதமும் கிட்டுது
ஊழ்வினை விட்டது போதமும் கிட்டுது
இதோ அருள்-தரும்-முகம்  அதில்-இதம் பெறும்-மனம் 
விடாது-நம்மைக் காத்திடும் சாயிராம  நாமமும்..!
---------------------------------------------------------------
Here is the divine face that oozes out love and grace;
In that will the hearts get solace.
The heart that gets to see the divine darshan of SAI forgets itself in bliss!
The very same divine feet walked in Shirdi that day
It performed miracles in human form
It descended on earth in Puttaparthi and showered its love on the people and protected.
The divine force viz Sathya SAI walked 100 ft towards us when we take just one foot towards it;
It attracted the hearts of people with its ever flowing love.
The Pranava sound reverberated in its breath
When the divine vibhuti produced by its hand is applied the Maaya induced Karmic effects are nullified,
paving way for Salvation.
Here is the divine face that oozes out love and grace;
In that will the hearts get solace.

MENU


No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...