Monday, 6 October 2025

55. கண்ணாலே தாயன்பின் கரிசனம் தந்தாளும் சாயீசன் தரிசனம் -SAI Darshan


சிலையாகநின்றேனம்மா .. அம்மா..சிலையாகநின்றேனம்மா..!

சாயீசன் அழகாக நடை-போட்டுவரும்போது
சிலையாகநின்றேனம்மா .. அம்மா..சிலையாகநின்றேனம்மா

விலையாகத் தந்தேனம்மா என்னையே  விலையாகத் தந்தேனம்மா
விலையேது எதுவென்று திகைத்து-நான் எண்ணியே 
விலையாகத் தந்தேனம்மா என்னையே   விலையாகத் தந்தேனம்மா..!

பதம்-என்ன மலரோ நடை-என்ன நடமோ என்றெண்ணி  மலைத்தேனம்மா 
ஸ்வாமியைக் கண்டே நான் மலைத்தேனம்மா 
பதம் போல மலரில்லை அதன் மென்மை மலர்க்கில்லை என்றே நான் மலைத்தேனம்மா 
அய்யனின் பதம் கண்டு மலைத்தேனம்மா 

ஒளியொன்று  கண்டேனம்மா கண்களில் ஒளியொன்று கண்டேனம்மா
பனிபோல என் நெஞ்சில் அது பெய்ய ஜில்லென்ற சிலிர்ப்பொன்று கொண்டேனம்மா  
நெஞ்சிலே சிலிர்ப்பொன்று கொண்டேனம்மா  ..!

என்னென்று சொல்வேனம்மா ஐயனை யாதென்று சொல்வேனம்மா 
மாதவம்  செய்தோர்க்கும் கிட்டாத பாக்கியம் தந்தாள வந்தானம்மா ஐயனை  
என்னென்று சொல்வேனம்மா நான் யாதென்று சொல்வேனம்மா ..!
-------------------------------------------------------------------------
There I stood like a statue on seeing SAI's divine Darshan walk
I gave myslef to Him at that very moment
Is Swamy's feet flower and His walk a dance-Thus I wondered!
I saw the divine Jyothi when He walked across me,
I felt it in my heart like a cool breeze wafting through giving goosebump
What can I say about our Swamy!
He descended on earth to shower His blessings and Prema that is difficult to explain even to the most exalted souls.
How can I explain His grace!

 MENU


No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...