Thursday, 11 September 2025

31.அறத்திலே உறைபவன் அறமுமா யிருப்பவன் - Dharma personified

Click Here


கறைபடா மனம்தனில்  வசிப்பதை உகந்தவன்

அசைந்திடாத உண்மையில் இசைவுறும் மனத்தவன்

பிழைபடாத் தராசென அசைவுறா மனத்தினன்

மறைதனில் ஒளிர்பவன் விரைமுனி மனத்துளன்

குறைபடா நிறைஅவன் குறைந்திடா *விரைஅவன்

நடு நிலை வகிப்பவன் தொழுதிடக் கொடுப்பவன்

தாமரை விழியினன் நேர்மையின்  வழியினன்

அறத்திலே உறைபவன் அறமுமா யிருப்பவன் ..!


விரைமுனி மனத்துளன் = சிறந்த முனிவர்களின் மனத்தில் உறைபவன் 

விரை= சிறப்பு, சிறந்த


SAI the almighty dwells in pure hearts

He is the foundation of unshakable faith

He is like the balance of justice and dharma

He shines in the Vedhas and in the hearts of exalted sages

He has the heart that is the fountain of inexhaustible love

He is always stably rooted in Dharma and Justice

He melts of devotion and grants everything to devotees

He has eyes as beautiful as Lotus flower

He treads the path of Dharma

He is the nucleus of Dharma and verily the Dharma itself


 MENU


No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...