Friday, 1 August 2025

25.கோதில்லாத சாதுக்களின் செயலும் பலனும் ஏற்பவன்-SAI the protector

 


ஞாலத்துயிர் படைத்து-காத்து உயிருமா யிருப்பவன்

காலத்துக்கே காலம்சொல்லி காலம்கடந்து நிற்பவன்

சீலம்கண்டு போற்றலாகக் கோலம்கொண்ட கோமகன்

புலத்திருந்து உயிர்களுள்ளே உய்யுகின்ற  உயிரிவன்

தங்கவண்ணம் எங்கும்மின்னும் அங்கம்கொண்ட தூயவன்

எங்கும்உயிர்கள் தங்கும்புவியை காவல்கொண்ட தாயவன்

கோதில்லாத சாதுக்களின் செயலும்பலனும் ஏற்பவன் 

மாதவத்தில் மகரிஷிகள் மனதைவைக்கும் மாதவன்


He is none other than SAI Who, Creates the lives in the universe, protects them and is the core of all lives in every world.

Dictates time limit even to time and be ever transcending the time.

He is adorable by way of His greatness.

He dazzles in body of golden splendor. 

He accepts all the karmas and the effect thereof of pious and saatvik devotees.

is the Maadhava in whom the maharshis fix their consciousness and contemplate ever!



No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...