அணைத்துக் கருணை பொழியும் நீ .. அணைக்க யாரு மற்ற நான்
கேட்கும் வரங்கள் அருளும் நீ .. கேட்டறியா பக்தன் நான்
தேறும் வழியின் தெய்வம் நீ .. யாரு மறிந்த பாபி நான்
விண்ணி ருக்கும் பரமம்நீ மண்ணில் உழலும் சிரமன்நான்
நீயே நல்ல போதகன் நானோ உந்தன் சாதகன்
எங்குமுள்ள நீதான் என்றும் காக்கும் தாயும் தந்தையும்
கேட்கும் குருவும் நண்பனும்
நீயும்நானும் சொந்தமே நீண்டகால பந்தமே
தூயன்உன்னை எண்ணிடவே கண்டிடாதென் சித்தமே
விண்ணுமண்ணு மாகிநிற்கும் கண்ணில்காண அறிதுமாய்
பரந்துநீ இருப்பதால் விழைந்தஒன்று மாகநீ
தெரிந்தெடுத் தருள்கொடு உந்தனிரு தாள்கொடு
உவந்துநெஞ்சம் நெகிழ்ந்துநானும் சொல்லுகின்ற ஒர்மொழி
புகுந்துதஞ்சம் கொள்ள நானும் கண்ட தான ஓர்வழி
விரைந்துவந்து காத்திடாயின் உனக்குச்சேரு மென் பழி..!
------------------------------------------------------------
Hey Lord SAI!
You embrace the destitutes and shower your grace; I am like a destitute
You are the almighty that grants boons; I am your devotee who does not know what to ask.
You are the God who saves even the sinful; I am sinful too
You are the exalted parabrahman residing above; I am the ignorant human suffering in the world out of Maya
You are the Guru; I am your devotee
All pervading you are my mother father Guru and friend!
You and me are related for ages ( I came to know because you said so!)
Inspite of it I do not know you well.
Such an ignorant me can not be saved by none other than you, Hey SAI!
So forsake me not!
If you donot take charge of me, you will be caught up with that blame!
No comments:
Post a Comment