Friday, 31 October 2025

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness


அவனுக்கு எவனுண்டு நேர் ?

இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்

 
அவனுக்கு எவனுண்டு நேர் ?
சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார் 
அவனுக்கு மலரென்று பேர் 
அந்த மலர்வீசும் மணம்என்றும் மனம்தன்னிலே 
அவனுக்கு மணமென்று பேர் 
அந்த மணமெங்கும் நிறைகின்ற நினைப்பென்பதே 
அவன் அன்பில் கட்டுண்டதேன் ?
அது அன்பற்ற முடவர்க்கு எட்டாததேன் 
அவனுக்குக் குளிரென்று பேர்
அந்தக் குளிர்பட்டு கல்லிங்கு தளிர்விட்டதே 


அவன்கொண்ட கவர்ச்சியைப் பார்
அதில் மனம்கொண்ட கிளர்ச்சிக்கு என்னென்றுபேர் ?

சிரிப்பென்னைப் பித்தாக்குதே
அந்த சிரிப்பேதான் அதைப்போக்கும் மருந்தாகுதே

விழிச்சுடர்வானத்து தீ
அந்தத் தீச்சுட்டு நெஞ்செல்லாம் குளிர்கின்றதேன்? 

அவனுக்கு மெய்யென்று பேர் 
என்றும் அவனின்றி நம்வாழ்வு பொய்யானதே 

அவன் இருக்கப் பக்கத்திலே
பின் ஏதுண்டு செய்வேலை சொர்க்கத்திலே 

அவன் காணக் கொண்டாட்டமே 
என்றும் அவனின்றி மனதுக்குத் திண்டாட்டமே 

அவனேதான் தூக்கத்திலே 
அவன் இல்லாது மனம்பொங்கும் துக்கத்திலே

யாரங்கு பார்தன்னிலே 
அங்கு அவனின்றி மூச்சில்லை திக்கெட்டிலே

அவன் போல அன்புக்குமோர்  
அணிசெய்யும் அணியாகத் திகழ்கின்ற தார் ?

அவன் கையில் நீரூற்று போல் 
 பொங்கும் நீறாலே கல் நெஞ்சும் கரைகின்றதே 

அவனுக்கு நிலமென்று பேர் 
அவன்மண்ணுக்கு வந்திட்ட நிலவேதான் பார் 

அவன் வேகம் காற்றானதே 
அதன் மோகத்தில் மனம்பறக்கும் காற்றாடியே 

சிறிதான அவன்காயமே
அன்று அவன்தொட்டு நின்றிட்ட தாகாயமே 

அவன்செய்த மாயங்களே
விட்டுச் செல்கின்ற தின்பத்தின் சாயங்களே

அவனாட்டம் தீராதது
அது கேட்டிட்ட உள்ளங்கள் நேராகுது 

அவன் நெஞ்சம் பஞ்சானது 
அது அன்பற்ற நெஞ்சத்தில் துஞ்சாதது 

அவன்கெஞ்சும் பிஞ்சானது
அன்புத் தாயன்று கொண்டிட்ட நெஞ்சாலது

அவன்நல்ல குணங்கள் தன்னை
நாமெண்ண யுகம்போகும் முடிக்கும் முன்னே

அவன் கமலப் பாதங்களே 
நம் மனம்எண்ணப் போமந்தப் பாவங்களே 

அவன்காணப் பிறந்திட்டச் சேய்
ஆதி சேஷன்தான் கடல்மீது அவன்கொண்ட பாய்

அவன் நாமம் கூறுங்களே
அந்த கல்லென்ற மனம்கரைந்து தேறுங்களே 

அவன்சொன்ன பாதைக்கு பேர் 
நீதேடாதே கிட்டாது சேவைக்கு நேர் 

அவன் சொன்ன வார்த்தை களே 
என்றும் பதில்சொல்லும் நின்றங்கு யுகத்துக்குமேல்

யாதும்பே ராகின்ற தே 
'அது' 'அது'வாக யுகம்பட்டு நிற்கின்றதே..!

100.SAI the Peerless nearness
------------------------------------------------------

Who is equal to Lord SAI
In this world only He himself is equal to Him
Who is equal to Lord SAI
Not even an atom moves without His will
He is called as flower
It ever wafts frarently ever through pure hearts 
He is called as perfume
The same name perfumes the heart of purity
Why is he bound by love; It is not know to the loveless handicapped
He is called as coolness which makes even a rock to sprout
Look at His bewitching divine beauty; How can you describe the Aananda that permeate the being instantaneously!
 
His divine smile maddens me; The very same smile cures my madness too!
His glows like a fire of love;
Yet that fire when it touches cools my heart!
His name is truth without that truth our life is false!
When He is near us ; what business do we have in heaven!
Mere sight of Him enchants the heart inexplicably
But His absence from heart saddens it beyond words!
Only He remains even in sleep without His thought the heart drowns in sadness!
Without is his breath there is no Universe
Who else is there who even beautifies love!
Even hearts as hard as Rock dissolves without a trace of hardness by His VIBHUTI that is nothing but His love!
He is the earth He is also the moon that descended on earth
He is faster than air yet our mind goes to Him faster than that with the desire for His love!
His body is small ; yet it scaled the worlds 
He performed mysterious miracles that leave blissful impressions in pure hearts!
The stories of His leelaas are infinite in number
They cure the hearts of the disease of ignorance!
His heart is as soft as cotton; It does not dwell ever in loveless hearts!
Though He is verily the almighty; He begged to His mother because of her pure love for Him.
Any amount of time is insufficient to even count His glorious attributes!
Mere rumination of His divine feet will ward off our sins induced Karmaa!
He may look to be born as an ordinary human;
But He verily is the Lord Vishnu who is ever at Yogic sleep on Aadhiseshaa!
Let's chant His name ever and soften our hearts to attain purity!
Don't look beyond the path of life He showed, You can not find one!
His sacred word will transcend time and answer our doubts ever!
Every thing is His name and everything is in His name and stands ever transcending time as Sat Chit Aanandaa!

SAIRAM
-----------------------------------------------------------------------------------

MENU
 

99.ஸ்வாமிஸ்வாமி என்றுசொல்ல-The word


ஸ்வாமிஸ்வாமி என்றுசொல்ல கண்ணில்நீரும் முட்டுது
ஏமிஏமி என்னும்ஒலி காதைவந்து எட்டுது
நிறைவுறாது நீயுமிங்கு விட்டுசென்ற உன் 'இடம்'
சிறப்புறாது எங்கள்நெஞ்சம் சிறைப்படாமல் ன்னிடம்
கறைபடாத நெஞ்சம்கொண்டு சேவைசெய்யப் பழகுவோம்
கரைந்தநெஞ்சின் ஈரம்கொண்டு பாவம்தன்னைப் போக்குவோம்
பறந்திடாத வண்ணம் நெஞ்சில் என்றுமேநீ தங்கிடு
விரைந்துநீயும் பிரேமசாயி வடிவம்தன்னில் வந்திடு!

99.The word

Eyes moist with chants of  'Swamy'
The word Yemi sweetened by Swamy's sacred mouth reaches the ears at once
The voild you left behind will not be filled by anybody else
The heart will not be glorified without adhearing to your sacred advices
We shall practice the selfless seva
We shall embrace the life of loving heart & wash off our sins
Hey SAI, Please dwell in our hearts ever
Please return soon as Prema Sai!

 

MENU

98.கேளீரோ சாயிராமனின் காதையை - The story of SAI


கேளீரோ சாயிராமனின் காதையை
கேளீர் சாயி-அவ..தாரத்தின்-மகிமையை

கேட்க-கேட்க மெய்-சிலிர்த்திடும் தானாய்
கேட்டிடும் செவியில்-இ..னிக்கும்-தீந்..தேனாய்

மஹா..நுபா..வர்கள் துதித்திடும்-ஸ்வாமி
அவனடி த்யானத்தில் அறுமே மேனி

சிட்டெனப் பறந்திடும்-பாவங்கள் தூசாய்
கேட்டிடும் மனங்களும் ஆகிடும்-லேசாய்

மாயமோகமெனும் விகாரம் தானே
போயே விலகிடும் நீ-அறிவாயே

வெங்கவதூதரின் வேண்டலில் வந்தனன்
தேடக்-கிட்டா..த-சதாசிவ-ரூபகன்

வித்யா வாஹினி தனில்-அறி..வொளி-பெற
நாலுவேதப் பொருள்-எளிதேவிளங்கிட

ப்ரபு சரித்ரமதைக் கேட்பாய் கேட்பாய்
ஞான-இ..லக்கணத்தைக் கேட்டருள்பெறுவாய்

சாயிராமனின் காதையே காட்டாதோ உயர்பாதையை
சாயிராமனின் காதையே காட்டாதோ உயர்பாதையை

ஸ்தூல-ரூபம் தனை பரமன்கொண்டானே
புண்யஷேத்ர-புட்ட பர்த்தியில் தானே

ப்ரேமநாமம்-தனை தரித்து-மண்மேலே
ரத்னகுலத்திலே அவதரித்தானே

மானிடர் போல்-வெறும் ப்ரசவமில்லாமே
விளைந்த-ப்ர..வேசமோர் அதிசயம்-தானே

கிணற்றினில்-நீரினை முகந்த-தாய் வயிற்றில்
உருண்ட-ஓர் பந்தென ஒளி-புகத்தானே

மனிதவடிவில்-சக்திசிவனுடன்-தானே
கொண்ட பிறவி-சத்ய சாயிபிரானே

அழகாய் சாயி-இவ்வுல..கில்-பிறந்தான்
பிறந்ததும் அழவில்லை அழகுறச் சிரித்தான்

பிறந்த சேயின்-நூல் படுக்கையின் கீழே
விரிந்தது சேஷனின் பாம்பணைதானே

இசைமழை பொழிந்தது கருவியில்-தானாய்
முன் நிகழாத-ஓர் அற்புதத்-தேனாய்

சாயிராமனின் காதையே காட்டாதோ உயர்பாதையை
சாயிராமனின் காதையே காட்டாதோ உயர்பாதையை

அழகாய்க் குழந்தையும் பள்ளிக்குப் போனான்
கற்றிடத் தேவை-இ..லாத-நம் பெருமான்

உடன்-பல நண்பர்கள் படை-போல் சூழ்ந்து
அடையினில் தேனீ என-தினம் மொய்த்து

அழகுசத்தியா பேச்சில்-வசமாகி
எனக்கு-எனக்கு-என ..சொந்தம் கொண்டாடி

நன்றென அவன்-தரும் அறிவுரை-ஏற்றே
உளம்-மகிழ்ந்திருந்தது அவர்-பெரும் பேறே

தாயினும் மேலொரு தெய்வம்-இராதே
தந்தையின் சொல்லரு..மந்திரம் தானே

பிற-மதத்..தோரையும் தன்-பால் இழுத்தான்
அவரையும்-சோதரர் என்றே-அழைத்தான்

சாப்பிடக் கேட்பவர் தனக்குணவளிப்பான்
நீரே தனக்கவன் உணவெனக் கொள்வான்

ஏதுமிலாதவர் என்பவர் எல்லாம்
ஆஹா என-மகிழ்ந்தாடிட அளிப்பான்

சாயிராமனின் காதையே காட்டாதோ உயர்பாதையை
சாயிராமனின் காதையே காட்டாதோ உயர்பாதையை

அடடா ஒன்பது வயதினில்-பெம்மான்
அறிவினில்-எண்பது வயதெனத் திகழ்ந்தான்

அவன்-திறம் அறிந்தவர் கொண்டமர்-தானே
அவர்-சா..யீசனின் பாட்டனார் தானே

இறையெனப் பேரனை உணர்ந்ததனாலே
தினம்-அவன் பெருமையை அவர்-உரைத்தாரே

ஆஹா-உன்-பதம் கிடைத்திடும்-பேறா
ஜகத்தை-ஆள்பவ வா-என் பேரா

சாயி-யாரென அறிந்து கொண்டாரே
வாழ்வினை-வென்ற-கொண்..டமர்-பெருமானே

கடைசியில் அவர்-தன் பேரனைத்-தானே
சார்ந்தே மடியினில் உயிர்-நீத்தாரே

கஷ்ட-துக்க விதி-விடிவே சாயி
அருள்மழை பொழியும் மேகமேசாயி

மாயத்தின் பூட்டுக்கு அவனேசாவி
சதா-அவன் ஜபம்-கொள்வாய் நாவில்

உதட்டில்-பஜனை கரங்களில் சேவை
ஜனன-மரணச் சுழல் போக்கிடும் பூஜை

அந்தகாரம்-எனும் காரண தேஹம்
விடா-திருக்கும்-அதில் துணை-வரும் நாமம்

தினமும்-நம் வாழ்வில் நாமத்தைக்கூறி
நீ-தான் துணை-என அவன்-பதம் நாடி

சந்தத..மவன்-திரு நாமத்தைக் கூறி
பூத-உ..டல்-விடும் நாள்-வரை பாடி

ஓம்-எனும் ப்ரணவத்தின் நாதமதே-தான்
ஞான-புத்தி-சேர்ப்..பதுவுமதே-தான்

என-நீ எண்ணி சதா-அதைச் சொல்வாய்
கீதையாம் சாயி பொன்-மொழி கொள்வாய்


98.The story of SAI

Listen to the sacred story of SAIRAM : Listen to the glory of the SAI Avatar
Goosebumps will pervade the body and the ears will be se=weetened when the story is listened to
Swamy is the goal of the meditation of exalted souls
Dhyaanaa on SAI will cut asunder the birth death cycle
The sins will be washed off at once and the hearts will be purified and become light on hearing his sacred name.
The desires induced by Maaya will go away
This SAI is verily the God, Lord Siva who descended on earth because of Venga avadutha's request
To get enlightened by HIS vIDHYAA vAAHINI and to get Vedic illumination, 
listen to the sacred story of the lord
Listen to the sacred story of SAIRAM
Listen to the glory of the SAI Avatar
The Almighty to a human body and descended on earth in Ratnakara Kulaa in the sacred sthala Puttaparthi with Love as name
His advent is not through human delivery but by divine entry into the world
SAI entered the womb of Easwaramma as a ball of blue light
He descended as Siva sakthi aspects combined into one.
The SAI child did not cry like any mundane child as soon as He is born on earth instead smiled!
Below the cotton cloth bed on which SAI was laid as soon as He came into earth wiggled a snake that is nothing but Aadhisesha
Various musical instruments in the house started playing on their own on His advent on earth
These are miracles that proclaim His divinity to the world
Listen to the sacred story of SAIRAM : Listen to the glory of the SAI Avatar
The lord who has no need to learn anything went to the school like an ordinary human child
Due to the innate divinity, the other children in the school and neighborhood got attracted to the divine Sathyaa
Baala SAI started His gospels even at the tender age
He taught his friends the tenats of Sanaatana Dharmaa
He will feed the poor and serve the helpless
Naaraayanaa did Naaraayana Seva
Naaraayana performed Nara Yagnya Sevaa
Listen to the sacred story of SAIRAM : Listen to the glory of the SAI Avatar
At the Age of NINE SAI spoke wisely like a ripened wise old man of eighty
His grand father Kondamar understood his divinity and extoled him.
He realized God as SAI.
He had the fortune of attaining Mukthi on the Lap of the Almighty
SAI is the solution to the Maaya induced problems
He is the key to the lock called Maayaa
The SAI naama Japam is to be ever on the lips for deliverance
Engage in the Poojaa of SAI naamaa in lips and SAI service in hands to get out of the clutches of birth death cycle
"Help ever Hurt never" - Engage ever in this Saadhanaa to get a pure heart to Love all Serve all & ultimately merge with the Almighty SAI!
Listen to the sacred story of SAIRAM : Listen to the glory of the SAI Avatar.


 MENU

97.பாழும் நெஞ்சம் ஏங்குதைய்யே சாயி பெருமானே-Longing for SAI

 

சொல்லிலே இதம்கொடுத்தாய் சாயிபெருமானே 
மீண்டுமதை வந்தளிப்பாய் சாயிபெருமானே
தெள்ளமுதின் தீஞ்சுவையும் சாயி பெருமானே
வந்துதிக்கும்உந்தன் சொல்லாய் சாயி பெருமானே
 அன்ன நடை தரிசனத்தை சாயி பெருமானே
யாருமில்லை தந்திடவே சாயி பெருமானே
சின்னநடை கண்டிட நான் சாயி பெருமானே
எத்தனை நாள் காக்கணுமோ சாயி பெருமானே
நீறினிலே நோய் களைந்தாய் சாயி பெருமானே
பக்கம்-வந்து சோறளித்தாய் சாயி பெருமானே
பாரதனில் நீஉலவும் நாளுக்குத் தன்..னாலே 
பாழும்நெஞ்சம் ஏங்குதைய்யே சாயி பெருமானே...!

97.Longing for SAI
--------------------------------

Lord SAI You gave solace by your words
Lord SAI give it again with your return to earth soon
Lord SAI your words are sweeter than nector
Lord SAI there is none to give your enchanting darshan
Lord SAI how long should be the wait yet to see that walk again
Lord SAI You warded off the disease through your sacred Vibhuthi
Lord SAI You came unto us to feed lovingly
Lord SAI the heart longs for your return to earth!
Lord SAI return soon, please return soon!


MENU


96.பொங்கும் அன்பிலுள்ளம் அவன்கனிந்து நின்றான்-Loving heart

 

கண்ணிலருள் இதம் கொடுக்க 
மண்ணில் பரம் பதம் கொடுக்க
நெஞ்சிலன்பு அலை எழும்ப  
தஞ்சம் மடி வழங்கி நிற்க
காவியங்கி தரை தவழ வந்தான் 
பொங்கும் அன்பிலுள்ளம் அவன்கனிந்து நின்றான் ..கனிந்து நின்றான்...!
விண்ணளந்த வாமனனே மண்ணில்வந்த நாரணனே
மானிடத்தின் உடலுடனே வந்தான்
அவன் சாயிஎன்ற திருப்பெயரைக் கொண்டான் ..பெயரைக் கொண்டான்..!
பட்டுக்கரும் குழல்திகழ  பக்தர்களின் மனம்மகிழ
தரிசனத்தை தினம்வழங்கி வந்தான்
அரியாசனத்தை எம்மனதில் கொண்டான் என்றும் கொண்டான்..!


96.Loving heart
----------------------------------------------------------------

The eyes ooze out Grace
The divine feet show the heaven on earth
The heart brims with the waves of love
The Lap offers refuge
The saffron cloth crawls live a wavy flag on floor
Thus Came SAI to give darshan
He is verily the Vaamanaa who measured the worlds by His foot
The same divine force Naaraayanaa descended on earth as SAI
He walked on earth and gave darshan with the enchanting silky black hair appearing as crown.
Thus came King SAI into our hearts and enthroned Himself there on!











95.நாளை-மீண்டும் அன்பில்-உலகை ஆளத் திரும்புவான்-Prema SAI will return


ஆதியந்தம் அற்ற-ஸ்வாமி சாயி-ராமனாம்

நாதியற்ற பேர்க்கு அருளும் கருணை தெய்வமாம் 

மாற்றம்-புரிய மனதில்-புகுந்த அன்பு-சாயிராம்  

நாளை-மீண்டும் திரும்பப் போகும் இறைவன் சாயிராம் 


 95.Prema SAI will return!

----------------------------------------------------------------

SAIRAM is the beginningless and endless almighty.

He is verily the loving God who showers His love and grace to the helpless

Lord SAI who enters the heart and transforms it will return soon as Prema Sai!



94.அன்று வந்த ராமனும் நேற்று வந்த கண்ணனும் -Ramakrishna SAI!

 


அன்று வந்த ராமனும் நேற்று வந்த கண்ணனும் 
இன்று ப்ரேமை வடிவிலே வந்த சாயி ராமனே
நோயைப் போக்கும் மருத்தகம் தாகம் தீர்க்கும் தண்ணீரும்
என்றும் சாயி அன்பினை சொல்லி நிற்கும் உலகிலே 

94.Ramakrishna SAI!

Sri Sathya SAI the personification of love is none other than the divine avatars Raamaa and Krishna
SAI's love will ever be remembered in this world through His service projects across the globe.



100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...